Thursday, July 13, 2006

தமிழ்மணத்தில் இம்சை அரசன் 23ம் புலிகேசி ரிலீஸ்

நம்ம கைப்புள்ள ஒரு ஊழல் வழக்கில் சிக்கினார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.
அதற்கான விசாரணைக்கு வந்தவர், "தொண்ட வறண்டு போச்சுயா, போயி ஒர்ரு டீய கீய சாப்டுட்டு வர்ரேன்யா" ன்னுட்டுப் போனவர் போனவர்தான். அவரைத் தேடும் பணி சர்வதேசப் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கைப்புள்ள நடிச்ச இம்சை அரசன் 23ம் புலிகேசி தமிழகத்தில் வெற்றி நடை வீர நடை போட்டு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனை நம் தமிழ்மணதிலே விடுதலை(ரிலீசுக்கு தமிழ்ல விடுதலைதானப்பா) செய்வதில் நான் பெருமகிழ்சி அடைகிறேன்.

பார்த்து மகிழ்க. உங்கள் சந்தோசமே வ.வா சங்கத்தின் சந்தோசம்.

16 Comments:

Blogger ராபின் ஹூட் said...

இல்லக்கா, ஏழு நிமிசப் படம் தான் போட முடிஞ்சது. மத்தவங்க படம் போடவும் நாம அனுமதிகனுமில்லயா!.

இல்லேன்னா மோனோப்போலி ன்னு ஒரு குரூப் கிளம்பிடும்..

3:29 PM  
Blogger கதிர் said...

மீதிய எப்பொ போடுவிங்க?

3:53 PM  
Blogger கவிதா | Kavitha said...

This comment has been removed by a blog administrator.

12:48 AM  
Blogger பழூர் கார்த்தி said...

ஆமா ராபின் ஹூட், முழுப்படத்தையும் போட்டாத்தேன் நாங்க பார்ப்போம் :-)

***

இல்லாட்டி, அடுத்த பார்ட் யாரு போடுவான்னு நீங்களே சொல்லுங்க !!

1:19 AM  
Blogger ராபின் ஹூட் said...

//ராபின் முழுபடத்தையும் நீங்களே போட்டுடுங்க.. டிக்கட் கிடைக்காம பார்க்காமேயே இருக்கேன்.. //

இனனக்கித்தான் DVD வாங்கப் போறேன். பாத்துட்டு எப்படி வலையேத்துறதுனு முடிவு பண்றேன்.

1:44 AM  
Blogger கவிதா | Kavitha said...

This comment has been removed by a blog administrator.

1:46 AM  
Blogger ராபின் ஹூட் said...

DVD வேணும்னா, ரிச்சி ஸ்டிரீட்டில் கிடைக்கிது. தலையில முக்காடு போட்டுட்டுப் போய் வாங்கிட்டு வந்துடுங்க.

ஒரிஜினலில் இருந்து போடப்ப்பட்ட காப்பி DVD விலை 300 ரூபாய்(with subtitle).

1:48 AM  
Blogger ராபின் ஹூட் said...

கவிதாக்கா எதுக்கு இதுக்கெல்லாம் நன்றி.
ஆமா, உங்களுக்கு செல்போனைத் திறந்தா ஆபாச SMS, இமெயிலைத் திறந்தால் ஆபாசப் பின்னூட்டம் எப்படிக்கா சமாளிக்கிறீங்க.

2:16 AM  
Blogger ராபின் ஹூட் said...

அண்ணே சோம்பேறி ...
அடுத்த பார்ட் யாரு போடுவாங்கன்னு தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல சரியா வரும்.

2:18 AM  
Blogger ராபின் ஹூட் said...

கவிதாக்கா, ஏன் அப்படிக் கேட்டேன்னா,
ராபினுக்குப் பின்னூட்டம் போட்டால் ஆபாச எச்சரிக்கைகள் வருவதாக காலையிலேயே தகவல் வந்தது.
நீங்கல்லாம் புலியையே முறத்தால் விரட்டிய வீரப்பரம்பரையைச் சேந்தவுங்க. அந்த மூட்டைப் பூச்சியை எப்படிக் கொல்றீங்கன்னு கேட்டான்.

2:27 AM  
Blogger Santhosh said...

ராபின்,
DVD வாங்கிடியாபா? எங்கையாவது அதை வலையேற்றம் செய்வது அந்நிய நாட்டுல இருக்குற நாங்களும் அதை பாப்போம் இல்ல...

4:13 AM  
Blogger நாகை சிவா said...

//DVD வேணும்னா, ரிச்சி ஸ்டிரீட்டில் கிடைக்கிது. தலையில முக்காடு போட்டுட்டுப் போய் வாங்கிட்டு வந்துடுங்க. //
யோவ், முக்காடு போட்டுட்டு போயி DVD வாங்குனது நீ தான்
ராபின் ஹுட்னு பெயர வச்சுகிட்டு இப்படி பண்ணலாமா?

5:44 AM  
Blogger ராபின் ஹூட் said...

இன்று தமிழக மற்றும் இந்திய அரசிடம் இருந்து ஒரு அவசரத் தகவல் வந்தது.

அதாவது புலிகேசியை வலையிலும் விடுதலை செய்வதால் கேளிக்கை மற்றும் சேவை வரிகள் கட்டச் சொல்லி உத்தரவு வந்துள்ளது.

என்க்கு இது போன்ற உள்குத்து(நன்றி முத்து தமிழினி)அரசியல் தெரியாததால், சொந்தச் செலவில் சூனியம் (மீண்டும் நன்றி முத்து)
வைத்துக் கொண்டது போலத் தெரிகிறது. எனவே புலிகேசி விடுதலை கால வரையின்றி ஒத்திவைக்கப் படுகிறது.

6:25 AM  
Blogger சீனு said...

//இல்லக்கா, ஏழு நிமிசப் படம் தான் போட முடிஞ்சது. மத்தவங்க படம் போடவும் நாம அனுமதிகனுமில்லயா!.//
செய்யுறது திருட்டுத்தணம், இதுல மத்தவங்க மேல கரிசணம் வேறையா?

//எனவே புலிகேசி விடுதலை கால வரையின்றி ஒத்திவைக்கப் படுகிறது.//
என்ன கலைஞர் ரேஞ்சுக்கு ஸ்டேட்மெண்ட் விடுரீங்க? இம்சை என்ன டா வின்சியா?

7:36 AM  
Blogger ராபின் ஹூட் said...

//செய்யுறது திருட்டுத்தணம், இதுல மத்தவங்க மேல கரிசணம் வேறையா?//
தனியாச் செஞ்சா திருட்டு. கூட்டமாச் செஞ்சா புரட்சி.

//என்ன கலைஞர் ரேஞ்சுக்கு ஸ்டேட்மெண்ட் விடுரீங்க? இம்சை என்ன டா வின்சியா//
அய்யயோ கலைஞர் என்ன அறிக்கை விட்டருன்னு எனக்கு சத்தியமாத் தெரியாதுங்க. இது நானே விட்ட அறிக்கை தானுங்க. நம்பீட்டிங்கல்ல :)

11:58 AM  
Blogger சீனு said...

//தனியாச் செஞ்சா திருட்டு. கூட்டமாச் செஞ்சா புரட்சி.//

அடப்பாவிகளா...ஒரு ரேஞ்சாத்தான்யா இருக்கீங்க.

//நம்பீட்டிங்கல்ல :)//

நம்பிட்டோம்ல...நம்பிட்டோம்ல...நம்பிட்டோம்ல...

12:05 PM  

Post a Comment

<< Home