Friday, August 04, 2006

ராபினுக்கு ஓய்வு....

கொஞ்சம் நாட்கள் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டு ஓய்வெடுக்கப் போகிறான் ராபின்.

இந்தியாவில் இருந்து கொண்டு யார் யாரையோ ஏமாற்ற அமெரிக்க நேரப்படி பதிவு போடுவது, ஜப்பான் நேரப்படி பின்னூட்டம் ரிலீஸ் எல்லாம் முடியல சாமிகளா!!!. சரியான தூக்கம் இல்லாததுனாலே நேற்று ஆபிசுல தலை சுத்திக் கீழே விழுந்துட்டேன். ஏற்கனவே ஹை B.P வேற.

டாக்டர் உடம்பை நல்லாப் பார்த்துக்கச் சொல்லியிருக்கார். உடம்பைத் தேற்ற வாரம் இரு முறை ஆட்டு நெஞ்செலும்பு சூப் உப்பில்லாம குடிக்கச் சொல்லியிருக்கார்.

அதனால மூர்த்தியண்ணே கொஞ்ச நாள் என் தொந்தரவு இல்லாம Enjoy......

9 Comments:

Anonymous Anonymous said...

ராபின் அண்ணே,

ஏதாச்சும் பிரச்சினையா? உங்க எதிரி உங்க வீட்டுக்கு வந்துட்டாரா?

இப்படிக்கு
உங்கள் நண்பன்

5:28 AM  
Blogger ராபின் ஹூட் said...

அன்புக்கு நன்றி நண்பரே.
//உங்க வீட்டுக்கு வந்துட்டாரா//

அவரால் என் தெருவிற்குள்ளேயே நுழைய முடியாது. ஏன்னா எங்க தெரு நாய்கள் எல்லாம் புது ஆளுங்களை அவ்வளவு சீக்கிரம் உள்ளே விடாது. :)

5:36 AM  
Anonymous Anonymous said...

http://mmoorthee.blogspot.com/2005/07/blog-post.html

5:54 AM  
Anonymous Anonymous said...

//எங்க தெரு நாய்கள் எல்லாம் புது ஆளுங்களை அவ்வளவு சீக்கிரம் உள்ளே விடாது//

நல்லா சொல்லுங்க. புது ஆளுங்களையா, புது நாயையா?!

5:56 AM  
Blogger ராபின் ஹூட் said...

அன்பர் மூர்த்தி அவர்கள் இந்தப் பதிவில் தன்னுடைய பக்கம் உள்ள நியாயத்தையும் சொல்ல வருகிறார். மேலும் விபரங்களை அவரின் பதிவிலேயே சென்று பார்க்கலாம்.

நான் அமைதியாக எந்த வித குறுக்கு விசாரணையும் செய்யாமல் கவனிக்கிறேன். வலைப்பதிவு மக்களும் நல்லது நடக்க அவ்வாறே செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அவர் செல்ல வருவதை முழுமையாகக் கேட்போம். அவர் உங்களைப் பற்றியோ, என்னைப் பற்றியோ குற்றம் சொன்னாலும் அவர் அனைத்தையும் சொல்லி முடிக்கும் வரை சொல்ல வந்த விசயங்களின் நோக்கம் திசை மாறாமல் இருக்க எந்தவிதமான குறுக்குக் கேள்விகள் கேட்காமல் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர் மூர்த்தி அவர்களே, எங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை ஏற்படும் விதமாக எல்லா போலிப் பதிவுகளையும் முதலில் மறைத்து வைத்துவிட்டு தங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு பணிவண்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என் எண்ணம் எல்லாம் தமிழ்மணம் உலகமெங்கும் மணம் வீச வேண்டும் என்பதே.

நல்லது நடக்க நான் எல்லாக் கடவுளையும் பிராத்தனை செய்கிறேன்.

2:35 PM  
Anonymous Anonymous said...

அண்ணாத்தே.. அதெல்லாம் ஒண்ணியும் நடக்கப் போறதில்லை..

தேதியப் பாரு.. :

"Thursday, July 28, 2005
வணக்கம் நண்பர்களே! "

2:39 PM  
Blogger ராபின் ஹூட் said...

//Thursday, July 28, 2005//
ஆகா அதப் பார்க்காம நா விட்டுட்டேனே!!! தூக்க்கக் கலக்கத்துல ஒன்னும் தெரிய மாட்டேங்குதே.

சரி அதுவும் நல்லதுக்குத்தான். பேச்சுவார்த்தை/கருத்துப் பகிர்வு என்று வந்தால் நாம் அதனை வரவேற்கிறோம் என்று அவருக்குத் தெரிவிக்கும் சந்தர்ப்பமாக இதனை நினைத்துக் கொள்கிறேன்.

2:44 PM  
Blogger ராபின் ஹூட் said...

அனானி abcd45, அட இந்த ஐடியா கூட நல்லா இருக்குதே. தேவைப்பட்டால் அதனையும் செய்யலாம். நன்றி. :)

2:59 PM  
Blogger ராபின் ஹூட் said...

அனானி abcd45, எப்படின்னு சொல்லுங்க. எனக்கு இது பற்றி ரெம்பத் தெரியாது.

3:01 PM  

Post a Comment

<< Home